Railway RPF Recruitment 2023: மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் (RPF Sub Inspector) ரயில்வே காவல் கான்ஸ்டபிள் (RPF Constable) ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பிற்கான மூன்று நபர் தலைமையிலான கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் மத்திய ரயில்வே பாதுகாப்பு பணியில் இருந்து விரைவில் இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு படையிலிருந்து ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு மற்றும் உடல் திறன் தகுதி தேர்வு ஆகியவை ஆர்பிஎப் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டது. இந்த தேர்வு முறையில் அடுத்து கொண்டு வரப்படும் மாற்றத்தின் மூலமாக RRB மூலமாக எழுத்து தேர்வு நடத்தப்படுவதாகவும் உடல் திறன் மற்றும் உடல் தகுதி தேர்வு RPF மூலமாக நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மத்திய ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் உள்ள உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு எழுத்து தேர்வு,உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Railway Notice – Click here