RPF SI Constable Recruitment 2024: இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து 4660 சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) மற்றும் காவலர் (Constable) ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://rpf.indianrailways.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கு 452 காலிப்பணியிடங்களும், கான்ஸ்டபிள் பதவிக்கு 4208 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in/ இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் 15.04. 2024 மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.05.2024.
சார்பு ஆய்வாளர்(SI) பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், மேலும் ரூ. 35,400/- என்று விகிதத்தில் ஊதியம் தரப்படுகிறது. கான்ஸ்டபிள் (Constable) பதவிக்கு பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது, ரூ. 21,700/- என்ற விகிதத்தில் உதயம் தரப்படுகிறது. சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 01.07.2024 என்ற தேதியின்படி வயதை கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 கட்ட வேண்டும், தேர்வு முடிந்த பிறகு ரூ.400 வங்கிக்கு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பெண்கள் மற்றும் சிறுபான்மையோர் ஆகியோர் ரூ 250 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு முழுத் தொகையும் அவர்களுக்கு திரும்ப வங்கி மூலமாக செலுத்தப்படும்.
ரயில்வே பாதுகாப்பு படை தேர்வுகளுக்கு கணினி வழி தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, உடற்பயிற்சி தேர்வு ஆகிய மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேலும் இதற்கான முழு அறிவிப்பு 15.04.2024 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
இதற்கான அறிவிப்பை https://rpf.indianrailways.gov.in/RPF/PDF/Upcoming.pdf என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.