School Holiday Tiruppur District 03 August 2023: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு நாள் என்னை முன்னிட்டு 03/08/2023 அன்று வியாழக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இ.ஆர்.பி அவர்கள் தெரிவித்துள்ளார்.
School Holiday Tiruppur District 03 August 2023
ஏற்கனவே ஆடி 18 தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு சேலம் மாவட்டங்கள் முழுவதும் உள்ளூர் விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
READ: சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பழைய கோட்டை கிராமம் மேலப்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்து ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 03/08/2023 ஆடி 18 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூரு விடுமுறை அறிவித்து இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
READ: ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மேற்படி உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 26/08/2023 அன்று சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம்1881 கீழ் வராது என்பதால் இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. உள்ளூர் விடுமுறை அளிக்க அறிவிக்கப்பட்டுள்ள 03/08/2023 வியாழக்கிழமை அன்று அரசு அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்டு பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது
Official Announcement – Click here