SETC DCC Recruitment 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி விரிவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor – DCC) அரசாணை வெளியிடப்பட்டது. ஏனெனில் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியவர்களுக்கான செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் (TN Govt Job 2023) கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பிற்கு என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக https://www.arasubus.tn.gov.in/ ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அதன்படி 18/08/2023 மதியம் 1:00 PM மணி முதல் 18/09/2023 மதியம் 1:00 PM வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
SETC DCC Recruitment 2023 Post Details
ஓட்டுநர் உடன் நடத்துனர் என்ற பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இரு வேலையும் செய்ய தகுதி உடையவராக இருக்க வேண்டும்.
Qualification SETC DCC Recruitment 2023
- இந்த பதவிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும். படிக்கவும். எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.
- செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
- உயரம் குறைந்தபட்சம் 150 செ.மீ. எடை 50 கிலோகிராம்.
- எவ்விதமான உடல் அங்க குறைபாடு (Physical deformity) அற்றவராக இருத்தல் வேண்டும். கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
Fee
- சேவை கட்டணம் நீங்கலாக SC/ST பிரிவினர் ரூ.590/-(18% GST உட்பட) கட்டணமாகவும்.
- வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/- (18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
Age Limit
- குறைந்தபட்ச வயது 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
- 01.01.2023 அன்றுபொதுவகுப்பினர்(OC)40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST) 45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு 01.01.2023 அன்று பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
Selection Process
இப்பணிகளுக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும் தகுதி பெரும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு ஓட்டுநருடன் நடத்துனர் திறன் தேர்வு (Pratcical) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது
How to Apply
இந்த ஓட்டுனருடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பம் முற்றிலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை இணையதளமான https://www.arasubus.tn.gov.in/ என்ற லிங்க் மூலமாக 18/08/2023 மதியம் 1:00 PM மணி முதல் 18/09/2023 மதியம் 1:00 PM வரை விண்ணப்பிக்கலாம்.