போதைப் பொருளான கஞ்சாவை பற்றிய விழிப்புணர்வு பாடல் பாடி பெண் காவலர்கள் காணொளி வெளியிட்டது தமிழக மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் ஆவடி காவல் நிலையத்தை சேர்ந்த பின் காவலர் அவர்கள் போதை பொருளாளர் கஞ்சாவுக்கு ஒரு பாடல் ஒன்றை எழுதி அதை பாடி காட்டி அசத்தியுள்ளார்.
இந்த பாடலை அவர் பாட ஆரம்பிக்கையில் சுடக்கு போட்டு “உனக்கும் வேணா எனக்கும் வேணாம் போததானுங்க” என்று பாட ஆரம்பித்து அந்த பாடலை முழுவதுமாக பாடியுள்ளார். இவர் ஏற்கனவே சாலை விதிகளை பற்றிய பாடல் ஒன்றைப் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உனக்கும் வேணா எனக்கும் வேணாம் போததானுங்க..
ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க..
போதை எல்லாம் மேடையில நடனம் ஆடுங்க..
வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க..
அந்த பள்ளிக்கூடம் பறவை எல்லாம் பாட்ட கேளுங்க..
இந்த கஞ்சாவைதான் நஞ்சாக எண்ணி பாருங்க…”
கஞ்சா போதையை தான் கைவிடணும் தம்பி…
குடும்ப இருக்குதப்பா உங்களை நம்பி..
உங்கள மூழ்க வச்சு மூலைல தான் தள்ளும்..
அதைத்தான் கைவிட்டாலே தூரமாகச் செல்லும்..
அட போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க..
இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்கள்..