Today School Holiday Due to Rain: கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது இதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள் ஆகியவற்றில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மழை மாவட்டங்களான நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் வால்பாறை மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல இடங்களில் மரம் சரிந்து விழுந்து காணப்படுவதால் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
School Leave News Today
இந்நிலையில் இந்த கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உதகை குந்தா கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதில் 4 தாலுகாக்களை தொடர்ந்து குன்னூர் கோத்தகிரி தாலுகாக்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாறையிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருவதால் அங்குள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.