Tomoto Price Ration Shop: கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்த வருகிறது. இது அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்தும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது. ஆப்பிள் உட்பட்ட விலை உயர்ந்த பழ வகைகளுக்கு நிகராக ரூ. 100 முதல் முதல் ரூ.140 வரைவரை கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தக்காளி விலையை கட்டுப்படுத்த கடந்த வாரம் தமிழக அரசு “தக்காளி” ரேஷன் கடைகளில் விற்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு முதல் கட்டமாக 300 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இதன் மூலம் தக்காளி விலையானது சந்தை மதிப்பிலிருந்து குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளியின் கொள்முதல் விலையான ரூ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ¼ கிலோ 15 ரூபாய் வரை நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இந்த தக்காளி ஆனது ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ வழங்கப்படுகிறது ஒரு கிலோ தக்காளி விலை ரூ 60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
READ: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000/- விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி?