கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை மிகக் கடுமையான விலையற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 100 முதல் ரூ 200 வரை உச்சம் தொட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் உணவகம் நடத்துபவர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் தக்காளியின் விலை கிலோ ரூபாய் 100 கீழே குறைந்தபாடு இல்லை.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான இயற்கை சீற்றம் மழை வெள்ளம் காரணமாக தக்காளியின் வரத்துக் மிகவும் குறைவாக இருந்தது. இந்த தக்காளி வரத்து குறைவின் காரணமாக சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தக்காளியின் விலை கடுமையான வெளியேற்றத்திற்கு சென்றது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ Rs. 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தக்காளியின் விளைச்சல் சற்று உயர்ந்துள்ளதால் ஏராளமான தக்காளி வரவு வருவதாக சொல்லப்படுகிறது. பழனி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக தக்காளியை பயன்படுத்தாமல் சிரமப்பட்டு வந்த மக்கள் இப்பொழுது தக்காளியை கிலோ ரூ. 40 – க்கு விற்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.