ஆகஸ்ட் 15ஆம் தேதி 77வது சுதந்திர தினத்தை ஒட்டி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் அவர் தனது உரையை நிகழ்த்தினார். அந்த உரையில் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்திய முதல்வர் அவர்கள் அரசின் 55,000 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் கூறிய குறிப்பில் நிகழ்வான்டில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். உணவு உள்ளிட்ட சேவைகளை வீடுகளுக்கு சென்று அழைக்கும் சேவை வழங்குபவர்களுக்கு என்று தனியாக நல வாரியம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரசு ஊழியர்களின் பணிசுமையை கருத்தில் கொண்டு நிகழ்வு ஆண்டில் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 55,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி புகையை தமிழக அரசு வழங்கி வருகிறது கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக குடும்ப ஓய்வூதியம் ரூ. 9,000 திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது இந்த ஆண்டு இருந்து குடும்ப ஓய்வூதியம் ஆனது ஒரு 10 ஆயிரத்திலிருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அவர்கள் அறிவித்தார்.