Category: வேலைவாய்ப்பு

  • TN 12th Result 2025 Live : தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN 12th Result 2025 Live : தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகிறது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

    tn 12th results 2025 link
    TN 12th Result 2025 Live : தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.

    இந்தாண்டு 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுத் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதல் நாள் தேர்வில் 11,430 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவையில்லாமல் மாணவர்கள் முடிவுகளை தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    TN HSE +2 Results 2025 Check Online
    TN HSE +2 Results 2025 Check Online

    TN HSE +2 Results 2025 Check Online : 12-ம் வகுப்பு முடிவுகள் அறிந்துகொள்ள தேவையானவை என்ன?

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களின் மூலம் முடிவுகள் அறிந்துகொள்ளலாம்.

    TN 12th Results Live : சரியாக 9:00 AM மணிக்கு தேர்வு முடிவுகள்

    தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியாக 9:00 மணிக்கு வெளியாக உள்ளது. மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

    TN 12th Results Live
    TN 12th Results Live : சரியாக 9:00 AM மணிக்கு தேர்வு முடிவுகள்

    TN HSC +2 Results 2025 :முடிவுகளை அறிந்துகொள்ள படிப்படியான வழிமுறை இதோ

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் பதிவெண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
    படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு செல்லவும்.
    படி 2 : அதில் முடிவுகளை அறிந்துகொள்ள மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
    படி 3 : Get Marks என்பதை கிளிக் செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    Result Link 1 :- https://tnresults.nic.in/

    Result Link 2 :- https://results.digilocker.gov.in/

  • 12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 9இல் இல்லை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 9இல் இல்லை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    TN 12th Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தற்போது மாற்றியுள்ளது.

    TN 12th Public Exam Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம்  தேதி வரை நடைபெற்றது.

    இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர். இம்முறை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணிகளும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளனர்.

    TN 12th Public Exam Result: ரிசல்ட் தேதி மாற்றம்!

    எப்போதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளே முதலில் நடைபெறும், அதைப் போலவே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளே முதலில் வெளியாகும். அந்த வகையில், இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என முன்னர் பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இன்றைய அறிவிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னர், அதாவது வரும் மே 8ஆம் தேதி அன்று வெளியாகும் என மாற்றப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் மே 8ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

    TN 12th Public Exam Result: ரிசல்ட்டை தெரிந்துகொள்வது எப்படி? 

    மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பள்ளிக்கல்வித்துறை இணையளதளம் மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இணையத்தளத்தில் வாயிலாகவும் ( https://results.digilocker.gov.inwww.tnresults.nic.in ) தேர்வு முடிவுகளை பெற மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெறலாம். 

    மாணவர்கள் அவர்கள் பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணிலும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்த கைப்பேசி எண்ணிலும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பெறுவார்கள்.

    TN 12th Public Exam Result: அன்பில் மகேஷ் அறிவிப்பு

    இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது X பதவில் இன்று பிற்பகல் 11: 15 மணிக்கு வெளியிட்ட பதிவில்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகளை வரும் மே 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட உள்ளோம்” என அறிவித்துள்ளார். 

  • தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும்

    தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும்

    Tamil Nadu Class 12 results to be announced on May 9: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வின் முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

    பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வு முக்கியமானதாகும். அந்த வகையில் 12ஆம் வகுப்பு தேர்விற்காக மாணவர்கள் இரவு பகலாக படிப்பார்கள். இதன் படி கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில்  7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள்,

    4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் எனமொத்தமாக  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.  இந்த தேர்வானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவானது மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணியானது பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்த பணியின் போதே மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியும் கடந்த வாரத்தோடு முடிவடைந்தது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட காலதாமதம் ஆகும் என தகவலும்,

    முன்கூட்டியே வெளியிடப்படும் என்ற தகவலவும் வெளியானது. இதன் காரணமாக மாணவர்கள் குழுப்பமான நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே மே மாதம் 9ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாள் முன்னதாக 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இதன் படி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை இரண்டாமாண்டு(+2) பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.