TN Board 12th Result 2025 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாகிறது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

TN 12th Result 2025 at tnresults.nic.in : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிடுகிறார். மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.
இந்தாண்டு 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுத் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதல் நாள் தேர்வில் 11,430 பேர் தேர்வெழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவையில்லாமல் மாணவர்கள் முடிவுகளை தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயக்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

TN HSE +2 Results 2025 Check Online : 12-ம் வகுப்பு முடிவுகள் அறிந்துகொள்ள தேவையானவை என்ன?
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களின் மூலம் முடிவுகள் அறிந்துகொள்ளலாம்.
TN 12th Results Live : சரியாக 9:00 AM மணிக்கு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியாக 9:00 மணிக்கு வெளியாக உள்ளது. மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

TN HSC +2 Results 2025 :முடிவுகளை அறிந்துகொள்ள படிப்படியான வழிமுறை இதோ
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் பதிவெண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் முடிவுகளை அறிந்துகொள்ள மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 3 : Get Marks என்பதை கிளிக் செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
Result Link 1 :- https://tnresults.nic.in/
Result Link 2 :- https://results.digilocker.gov.in/