Aspirant TamizhaAspirant Tamizha
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • கல்வி
Aspirant TamizhaAspirant Tamizha
Search
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • கல்வி
Follow US
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
கல்வி

12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 9இல் இல்லை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Siva
Last updated: May 7, 2025 1:47 pm
Siva
Share
2 Min Read
SHARE

TN 12th Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தற்போது மாற்றியுள்ளது.

TN 12th Public Exam Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம்  தேதி வரை நடைபெற்றது.

இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர். இம்முறை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணிகளும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளனர்.

TN 12th Public Exam Result: ரிசல்ட் தேதி மாற்றம்!

எப்போதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளே முதலில் நடைபெறும், அதைப் போலவே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளே முதலில் வெளியாகும். அந்த வகையில், இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என முன்னர் பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இன்றைய அறிவிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னர், அதாவது வரும் மே 8ஆம் தேதி அன்று வெளியாகும் என மாற்றப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் மே 8ஆம் தேதி அன்று காலை 9 மணிக்கு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

TN 12th Public Exam Result: ரிசல்ட்டை தெரிந்துகொள்வது எப்படி? 

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பள்ளிக்கல்வித்துறை இணையளதளம் மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இணையத்தளத்தில் வாயிலாகவும் ( https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in ) தேர்வு முடிவுகளை பெற மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பெறலாம். 

மாணவர்கள் அவர்கள் பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணிலும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்த கைப்பேசி எண்ணிலும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பெறுவார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட உள்ளோம்.#12thResult pic.twitter.com/B2Dm2lQEN9

— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 6, 2025

TN 12th Public Exam Result: அன்பில் மகேஷ் அறிவிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது X பதவில் இன்று பிற்பகல் 11: 15 மணிக்கு வெளியிட்ட பதிவில்,”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகளை வரும் மே 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட உள்ளோம்” என அறிவித்துள்ளார். 

TAGGED:TN 12th Result Date Change
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

tn10thresults2025
இந்தியாகல்விதமிழ்நாடு

TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

July 2, 2025
tn 12th results
கல்வி

TN 12th Result 2025 Live : தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

May 8, 2025
Tamil Nadu Class 12 results to be announced on May 9
கல்வி

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும்

May 6, 2025
Tnpsc group 4 hall ticket download 2025
கல்வி

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

July 2, 2025
Aspirant Tamizha © 2025. All Rights Reserved.
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?