கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமை திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து உரிமைதொகை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி புதியவர்களும் விண்ணப்பிக்கலாமா என அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் தொகையை விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது சம்பந்தப்பட்ட ஆர் டி ஓ அலுவலகத்தில் வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் திரும்பவும் விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் இத்து தொடர்பாக இரண்டு இணைதளங்கள் உள்ளன. Kmutappeal.tnega.org மற்றும் kmut.tn.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உதவித் தொகை கிடைக்கப்பெறாதவர்கள், உதவித்தொகை ஏன் கிடைக்கப்பெறவில்லை என்பதற்கான காரணம் பற்றி அவர்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறுஞ்செய்தி கிடைக்கப் பட்டவர்கள் அந்த குறுஞ்செய்தி மூலமாக அருகாமையில் உள்ள இ சேவை மையம் மூலமாக மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இந்த இ – சேவை மையங்களில் மறு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட தாலுகா அலுவலகங்களும் இதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன அங்கு சென்று கலந்து கொண்டும் விண்ணப்பத்திற்கான நிலைமை மற்றும் விண்ணப்பிப்பது பற்றியான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.