Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இதன் கீழ் மேலும் 2.5 லட்சம் பெண்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியில் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது.
Kalaignar Magalir Urimai Thogai: இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் மேலும் 2.5 லட்சம் பெண்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு ரேஷன் கடைகள் மூலமாக வரும் ஜூன் மாதம் முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் புதிதாக 2.5 லட்சம் பெண்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். இந்த புதிதாக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் விடுபட்ட மற்றும் இதற்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் இந்த விண்ணப்பங்கள் மூலமாக விண்ணப்பித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ரூபாய் 1000 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது?
- ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
- சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
- ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வத்தை இணையதளம் https://kmut.tn.gov.in/ பார்க்கவும்