School Holiday: ஆயுத பூஜை, விஜய தசமி வரவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
TN School Holiday saraswati puja ayudha pooja 2024: பொதுவாக அக்டோபர் மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அலாதி பிரியம் தான். ஏனென்றால் பிற மாதங்களைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தில் அதிகமான விடுமுறை நாட்கள் வருவதால் மாணவர்கள் இந்த மாதத்தை பெரிதும் விரும்புகின்றனர். மாதம் தொடங்கிய இரடண்டாம் நாளே காந்தி ஜெயந்திக்கு அரசு விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.
மேலும் அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து விடுமுறை வரிசைகட்டி வருகிறது. ஏற்கனவே தற்போது காலாண்டு தேர்வுகள் நிறைவு பெற்று அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறையானது வருகின்ற 6ம் தேதியுடன் நிறைவு பெற்று திங்கள் கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை முடிவடைந்து திங்கள் கிழமை திறக்கப்பட்டாலும் மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் உடனடியாக மீண்டும் விடுமுறை வருகிறது. அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
தொடர் விடுமுறையால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இம்மாத இறுதியான அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் மாத கடைசியிலும் விடுமுறை அமைகிறது.