RRB 2.74 Lakh Vacancy: இந்திய ரயில்வே துறையில் மொத்தமாக 2.74 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது இந்த காலிப்பணியிடங்களில் குரூப் -C மற்றும் லெவல்- 1 ( RRB Group-C, Level-1) காலிப் பணியிடங்கள் அடங்கும். இந்நிலையில் இந்த Railway Jobs 2023 தேர்வுக்கான அறிவிப்பு எப்பொழுது வரும் என்று தேர்வர்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் காவூர் என்ற RTI விரும்பி இந்த காலிப்பணியிடங்கள் இருப்பதாக RTI மூலம் கேட்டு தகவலை பெற்றுள்ளார். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு தரப்பட்டுள்ள 2.74 லட்சம் காலி பணியிடங்கள் ரயில்வே துறையில் ஜூன் மாதம் 2023 நிலவரப்படி உள்ளதாகவும் மேலும் அதில் Safety Category என்ற துறையில் 1.7 லட்சம் காலிப்பணியினருக்கு மேல் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
RRB 2.74 Lakh Vacancy
இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள இந்த தகவல் மொத்தமாக ரயில்வே துறையில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 காலிப்பணியிடங்கள் குரூப் சி மற்றும் லெவல் ஒன் பணியிடங்களாக உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 924 காலிப்பணியிடங்கள் சேஃப்டி கேட்டகிரி துறையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் 01.06.2023 நிலவரப்படி இந்த காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது
இந்நிலையில் கடந்த டிசம்பர் 2020ஆம் ஆண்டு ரயில்வே மினிஸ்டர் அஸ்வினி வைஷ்ணவி பாராளுமன்றத்தில் 3.12 லட்சம் Non- Gazetted காலியிடங்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Useful of the links