காலாண்டுத் தேர்வு விடுமுறை: 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுப்பு.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும்.
செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.
காலாண்டுத் தேர்வு விடுமுறை
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனிடையே மொத்தமுள்ள 5 நாட்களில் பொதுவிடுமுறை நாளும் அடங்கியுள்ளது. 28ம் தேதி வியாழன், 29ம் தேதி வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகவும், அக்டோபர் 2ம் தேதியான காந்தி ஜெயந்தியன்று பொது விடுமுறை நாளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.