TNPSC Grop 4 Notification 2024: டி என் பி எஸ் சி குரூப் 4, 2024 ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்தர் வரித்தண்டனர் வனக்காவலர் உட்பட்ட பல்வேறு பதவிகளுக்காக மொத்தமாக 6224 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் 30.01.2024 முதல் 28.02.2024 வரை https://apply.tnpscexams.in/ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TNPSC Group 4, 2024 – அறிவிக்கப்பட்ட பதவிகள்
- கிராம நிர்வாக அலுவலர்
- இளநிலை உதவியாளர் தட்டச்சர்
- சுருக்கெழுத்து
- நேர்முக உதவியாளர்
- நேர்முக எழுத்தர்
- தனிச் செயலர்
- இளநிலை செயல் பணியாளர்
- வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர்
- பால் அளவையாளர் நிலை 3
- ஆய்வக உதவியாளர்
- வரித்தண்டுனர்
- முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்
- வனக் காப்பாளர்
- வனக்காப்பாளர் ஓட்டுநர்
- வன காவலர்
- வன காவலர் (பழங்குடியினர்)
- கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்
மொத்த காலியிடம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, 2024 தேர்வு அறிக்கையின்படி மேற்கண்ட பதிவிகளுக்கு மொத்தமாக 6224 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான SSLC கல்வி தகுதியும். மேலும் ஒரு சில பதவிகளுக்கு 12th வழி படிப்புடன் இயற்பியல் வேதியல் உயிரியல் தாவரவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் சில பதவிகளுக்கு பட்டப் படிப்புடன் கூடுதல் பயிற்சிகளும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
- எழுத்துத் தேர்வு ( அனைத்து பதவிகளுக்கும்)
- உடல் தகுதி தேர்வு ( வனக்காப்பாளர், வன காவலர் பதவிகளுக்கு மட்டும்)
வயதுவரம்பு
- பல்வேறு பதவிகளில் பொறுத்து வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பணக்காவலர் வனக்காப்பாளர் அவர்களுக்கு குறைந்தபட்ச வயது 21 வயது 32,
- ஏனைய பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 32 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த வயது வரம்பு நிர்ணயம் இட ஒதுக்கீடு கீழ் வரும் பல்வேறு பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு சலுகை உண்டு.
- ஒரு சில பதவிகளுக்கு வயதுவரம்பு இட ஒதுக்கீடுங்கில் வரும் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு கட்டணம்
ரூ. 100/- இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது கட்ட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் விண்ணப்பதாரர்கள் http://tnpscexams.in/ என்ற இணைய வழி விண்ணப்பத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
- உங்களுடைய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.
- டி என் பி எஸ் சி குரூப் 4 2024 என்ற விண்ணப்பத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- புகைப்படம் மற்றும் கையெழுத்து தேவையான ஆவணங்கள் இவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- விண்ணப்ப கட்டணத்தை இறுதியாக செலுத்தி விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொள்ளவும்.
குறிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளபடி விண்ணப்பத்தை சரியாக விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள்
- இணைய வழி விண்ணப்பத்திற்கான ஆரம்ப நாள்: 30.01.2024
- இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.02.2024
- தேர்வு நேரம் மற்றும் தேதி: 09.06.2024 ; காலை 9:30 முதல் மதியம் 12 30 வரை.
- அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: ஜனவரி 2025
I’m ba tamil degree complete … Supervisor in company my talent singing and dance
Examination venue sir