Aavin Kanchipuram Thiruvallur Recruitment 2023: ஆவின் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது. முற்றிலும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இந்த Veterinary Consultant தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பின் (TN Govt Jobs 2023) கீழ் வரும் இந்த வேலை வாய்ப்புக்கு மொத்தமாக 4 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு எதுவும் கிடையாது நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு இந்த வேலை வாய்ப்பு நீங்கள் பெறலாம்.
Aavin Kanchipuram Thiruvallur Recruitment 2023
பதவியின் பெயர்
கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant)
மொத்த காலியிடம்
இந்த கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன
கல்வித் தகுதி
இந்த பதவிக்கு B.V.Sc & A.H உடன் கணிப்பொறி இயக்கக்கூடிய அனுபவம் இருக்க வேண்டும்
இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் சொந்த இரண்டு சக்கர வாகனம் கட்டாயம் இருக்க வேண்டும்
மாத ஊதியம்
இந்த கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கான மாத ஊதியம் ரூ. 43,000, இதில் மாத ஊதியம் ரூ. 30000 மற்றும் ஊதிய படிகள் ரூ. 13,000
நேர்முக தேர்வு தேதி மற்றும் இடம்
நேர்முகத் தேர்வானது 28.07.2023 காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், கக்கலூர் பால்பண்ணை, சிட்கோ தொழில்பேட்டை, கக்கலூர், திருவள்ளூர் – 602003 என்ற முகவரியில் விருப்பமும் ஆர்வம் உள்ளவர்கள் உங்களுடைய அசல் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.