வடசென்னையில் இ-சிகரெட் விற்பனை செய்வதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பர்மா பஜாரில் இ- சிகரெட் வைக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை எடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 1300 இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவற்றை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை அடுத்து சிரியா குப்தா காவல்துறை துணை ஆணையர் அவர்கள் குறிப்பிடுகையில் இ-சிகரெட் பயன்படுத்தக்கூடாது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2018-19 முதல் இந்த ஈ சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இ-சிகரட்டை பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.