சமீபகாலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் கோடை வாச தலங்களான ஊட்டி கொடைக்கானல் ஆகிய குளிர் பிரதேசங்களுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசு திட்டமிட்டுள்ளது.
நீங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்பவர்கள் ஆனால் மே மாதம்7-ஆம் தேதி முதல் இ- பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த இ பாஸ் முறை கொரோனா காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கோடை விடுமுறை காலங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், கடும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு வெளியூர் வாகனங்களுக்கு மட்டும் இபாஸ் முறை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த இ-பாஸ் முறை கோடை காலங்களில் மட்டும் அதாவது வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சூழியல் கருத்தில் கொண்டு, அது மட்டும் இல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்படும் இடையூறுகளையும் கருத்தில் கொண்டு இந்த இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகாவில் இருந்து ஊட்டி மட்டும் கொடைக்கானலுக்கு அதிகப்படியான வாகனங்கள் வருவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த இ-பாஸ்முறையை நடைமுறைப்படுத்துவதாக தெரிய வருகிறது.