Manarkeni App Download: TNSED Manarkeni தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த மணற்கேணி செயலி மூலமாக மாணவர்கள் சுயமாக கற்றல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த செயலியை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலேயே பாடங்களை கற்றுக் கொள்ளலாம். இந்த செயலையானது முற்றிலும் தனித்துவமாகவும் சுயமாகவும் கற்றுக் கொள்ளும்படி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மணற்கேணி செயலியில் பாடங்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டிகள் தொடர்பான விளக்கங்கள் தரப்பட்டுள்ளது அதில் பாடங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியிலான அனைத்து பாடங்களும் இந்த மணற்கேணி செயலி வழியாக நீங்கள் சுயமாக கற்றுக் கொள்ள முடியும். முதலில் மணற்கேணி செயலிக்கு சென்று பாடங்கள் என்ற பிரிவை தொட்டு உங்களுடைய வகுப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்பு தமிழ் அல்லது ஆங்கில வழியை தேர்ந்தெடுத்து உங்கள் பாடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் மாணவர்கள் சுயமாகவே ஆசிரியர்கள் இல்லாமல் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். வீட்டில் இருக்கும் பொழுது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும் போது இந்த செயலியை பயன்படுத்தி தாங்கள் சுய கற்றல் திறனை மேம்படுத்தலாம்.
இந்த செயலியானது அதிகாரப்பூர்வமாக கூகுள் பிளே ஸ்டோரில் 25/07/2023 முதல் கிடைக்கக் கூடியதாக உள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவோர் அனைவரும் இந்த செயலியை நீங்கள் பிளே ஸ்டோர் மூலமாக மிக எளிமையாக பதிவிறக்கம் செய்ய முடியும். கிட்டத்தட்ட 25 MB அளவில் இந்த செயலை பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு 5.1 மற்றும் அதற்கு மேல் உள்ள தொலைபேசிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை இந்த செயலியை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
TNSED Manarkeni App Download – Click here