இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கைத்தறி கற்றுத்தருவதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.11,250 ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (YOUNG WEAVERS INDUCTION AND ENTREPRENEURSHIP PROGRAMME FOR YOUNGSTERS) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் (அல்லது) அவர்களை தொழில்முனைவோர் ஆக்குதல்;
2. பாரம்பரிய கைத்தறித் தொழிலின் தொன்மை மாறாமல் புத்துயிர் பெறுதல்;
3. கிராமப்புற இளைஞர்கள் தங்கள் சொந்த பகுதியில் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக தொடங்குதல்;
4. வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழிலில் குறுகிய காலப் பயிற்சி அளிப்பது;
5. 2023-24ல் முதல் கட்டமாக இந்தத் திட்டத்தின் கீழ் 300 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது;
6. பயிற்சியின் மூலம் கைத்தறி நெசவில் நெசவு நுட்பங்களை கற்பித்தல்;
7. இந்தப் பயிற்சியின் மூலம் கைத்தறிப் பொருட்களின் உற்பத்தியில் தரம் மற்றும் அளவை மேம்படுத்துதல்;
8. பயிற்சியில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிக் காலத்தை முடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்
1. 18 முதல் 30 வயது வரை
2. கைத்தறி இயக்க தகுதி பெற்றிருக்க வேண்டும்.
3. படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.09.2023.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியானவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.