குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கைகளை ஏற்று டிஎன்பிஎஸ்சி இப்போது குரூப் 4 காலிப் பணியிடத்தை 10,748 ஆக உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குரூப் 4 தேர்வு எழுதியவர்களை மேலும் சந்தோஷப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிசி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (குரூப் 4 பதவி அடங்கிய) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் கிரேடு1, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக்காப்பாளர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு நகர்புறம் வாழும் மேம்பாட்டு வாரியம் வரித்தண்டு சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 7301 காலி பணியிடங்கள் இருப்பதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியிட்டு அதற்கான தேர்வு நடந்து முடிந்தது.
இதில் 22,02942 பேர் விண்ணப்பித்தனர். இதில் பெண்கள் 12,67,457 பேர் ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தார் 131 பேர். இதில் 18 லட்சத்து 50 ஆயிரத்து 473 பேர் மட்டுமே தேர்வை எழுதினார் 3 லட்சத்து 52 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மேலும் குரூப் 4 காலி இடங்கள் 2539 காலிப்பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அதிகரிக்கப்பட்டது எனில் மொத்த காலிப் பணியிடம் 9,840 ஆக அதிகரித்ததால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், தொடர்ந்து இரண்டாவது முறையாக 10,117 காலி இடமாக உயர்ந்தது. இப்பொழுது மூன்றாவது முறையாக 10 748 காலியிடங்கள் உயர்ந்துள்ளது. காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசியல்வாதிகள் தேர்வு எழுதியவர்களின் கருத்தில் கொண்டு காலியிடங்களை 20,000 முதல் 30,000 வரை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதே வேலையில் குரூப் 4 தேர்வு எவ்வளவு விரிவாக முடிக்க முடியுமோ அவ்வளவு முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக டிஎன்பிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.