இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காப்பீடு மட்டுமல்லாமல் பென்சன் திட்டங்களும் ஏராளமாக உள்ளன. அதில் ஒரு முக்கியமான திட்டம்தான் ஜீவன் சரல் பாலிசி திட்டம்.
எல்ஐசி ஜீவன் சரல் பாலிசி என்பது பாலிசிதாரர்களுக்குச் பணத்தைச் சேமிக்க உதவுவதோடு, நிதிப் பாதுகாப்பையும் வழங்கும் ஒரு எண்டோமென்ட் திட்டமாகும். எல்ஐசி ஜீவன் சரல் திட்டமானது வரி சேமிப்பு மற்றும் கடன் போன்ற பலன்களையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் மரணத்தின் போது நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இறப்பு பலன் நேரடியாக செலுத்தப்பட்ட பிரீமியத்துடன் தொடர்புடையது. அதேசமயம், முதிர்வுத் தொகையானது பாலிசி எடுக்கப்பட்ட வயதைப் பொறுத்தது. பாலிசி காலத்தின் இறுதி வரை உயிர்வாழும் போது செலுத்தப்படும்.
பாலிசிதாரர்களுக்கு இருக்கும் மிகவும் வசதியான விஷயம் என்னவென்றால், நீங்கள் பிரீமியத்தை ஆண்டு தோறும், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதம் தோறும் செலுத்தலாம்.
முதலீட்டாளர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியத் தொகையைப் பெறலாம். முதலீட்டாளர் இறந்த பிறகு, நாமினி அடிப்படை பிரீமியத்தைப் பெறுவார்.
எல்ஐசி சரல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.12000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பிறகு அடுத்த 60 ஆண்டுகளுக்கு மாத வருமானம் ரூ.12000 கிடைக்கும்.
இந்த ஓய்வூதியத்தின் பலனை உங்கள் வாழ்நாள் முழுவதும் பெறுவீர்கள். 60 வயதில் இந்த பாலிசியில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.58950 வருமானம் கிடைக்கும். உங்கள் முதலீட்டுத் தொகையே நீங்கள் பெறும் ஓய்வூதியத்தை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.