இரயில் நிலையத்தில் நடை மேடையை கடக்கும் பொழுது வந்தே பாரத் ரயிலில் சில நொடிகளில் உயிர் தப்பிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இரயில் நிலையங்களில் மக்கள் ரயில்வே பிளாட்பார்ங்களை கடக்கும் பொழுது பொதுவாக ரயில்வே நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள ரயில்வே நடைமேடை மேம்பாலங்கள் அல்லது நடைபாதை ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு நடைமேடையில் இருந்து இன்னொரு நடைமேடை ( பிளாட்பார்ம்) செல்வதற்கு நாம் நேரடியாக ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி ஏறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரியது.
ஏனெனில் சில தினங்களுக்கு முன்பாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் எனும் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நடைமேடை மாறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் இறங்கி ஏறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிர் இலையில் உயிர்த்தப்பிய அந்த முதியவர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தப்பிய நபர் சட்டென்று ரயில்வே பிளாட்பார்மில் மேலே ஏறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நொடிகள் மட்டுமே உள்ள நிலையில் அவர் உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ரயில்வே ஊழியர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து எச்சரிப்பதும் காட்டப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தால் நடைமேடைகளை கடக்கும்போது, ரயில்வே நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்பு அறிவிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.