RRC MAS Recruitment 2023: தென்னக ரயில்வேயில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் மொத்தமாக 67 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் லெவல் 1 முதல் 5 வரை உள்ள காலி பணியிடங்கள் விளையாட்டு வீரர்கள் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு மூலமாக நிரப்பப்படுகிறது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் சர்வதேச அகில இந்திய விளையாட்டு வீரர்களுக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
லெவல் 4&5 | 5 |
லெவல் 2&3 | 16 |
லெவல் 1 | 46 |
Total | 67 |
கல்வித் தகுதி
- லெவல் 4&5:- ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- லெவல் 2&3 :- 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- லெவல் 1 :- 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
- இத்துடன் இதற்கு இணையான விளையாட்டு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த தென்னக ரயில்வே ஸ்போர்ட்ஸ் கோட்டா பதவிகளுக்கு ஆன்லைனில் என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக 27/11/2023 முதல் 12/12/2023 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும் – Click here
தென்னக ரயில்வே விளையாட்டு இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிற்கு இங்கு விண்ணப்பிக்கவும் – Click here