TN Forest Recruitment 2023: தமிழ்நாடு வனத்துறை தர்மபுரி வனக்கோட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இதன்படி ஒரு தொழில் பொறியாளர் மற்றும் ஒரு தரவு நுழைவு இயக்குனர் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
பதவியின் பெயர்
- தொழில்நுட்ப உதவியாளர் – 01
- தரவு நுழைவு இயக்குனர் -01
கல்வி தகுதி
- தொழில்நுட்ப உதவியாளர் – B.Sc வனவியல் மேலாண்மை / M.Sc / M.C.A
- தரவு நுழைவு இயக்குனர் – கணினி பயன்பாடு அல்லது கன்னி அறிவியலில் ஏதேனும் பட்டம் அல்லது டிப்ளமோ ஓராண்டுக்கு குறையாத பணி அனுபவம்.
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான தேர்வு பற்றிய தகவல் பதிவு செய்யப்பட்ட/விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் தகவல் அனுப்பப்படும்
எப்படி விண்ணப்பம் செய்வது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை 22-6-2023 மாலை 5:45 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட வன அலுவலர், தர்மபுரி வனக்கோட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தருமபுரி- 636705, தொலைபேசி எண்: 04342 -230003
my name R Sivakumar