TN School Holiday Today: தமிழ்நாட்டில் உள்ளூர் பண்டிகைகள் மற்றும் முக்கிய விழாக்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதி அல்லது மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு குறிப்பிட்ட அந்த நாட்கள் விடுமுறை தினமாக அனுசரிக்கப்படுவது உண்டு. அந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக அடுத்து வரும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை அலுவல் நாளாக கடைபிடிப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சங்கரன்கோவில் “ஆடித்தபசு” திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் திருத்துறை ரவிச்சந்திரன் இ ஆபே அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆடித்தபசு திருநாள் 31.07.2023 திங்கட்கிழமை இன்று நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வு அரசு தேர்வுகள் தொடர்பான பணிகள் மற்றும் தேர்வுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு விடப்படும் உள்ளூர் விடுமுறை நாளை ஈடு கட்டும் விதமாக வருகின்ற 19.08.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
Check Holiday Notice – Click here