TNUSRB PC Exam Recruitment 2023 Notification: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் TNUSRB Police Constable Grade 2 Exam 2023 தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த இரண்டாம் நிலை காவலர் பதவியில் மொத்தமாக 3359 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அரசு காவல்துறையின் கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைனில் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே 18/08/2023 முதல் 17/09/2023 வரை விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்துப் பார்த்து மொத்த காலியிடம், தகுதி, உடல் தகுதி, தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் ஆகியவற்றை முழுவதும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
TNUSRB PC Exam Recruitment 2023 Notification
TNUSRB PC Exam Recruitment 2023 Post Details:
துறை | பதவி | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|---|
காவல்துறை | மாவட்ட / மாநகர ஆயுதப்படை (இரண்டாம் நிலைக் காவலர்) | 1189 | – | 1189 |
தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (இரண்டாம் நிலைக் காவலர்) | – | 780 | 780 | |
சிறை மற்றும் சீர்திருத்த துறை | இரண்டாம் நிலை சிறை காவலர் | 83 | 3 | |
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை | தீயணைப்பாளர் | 674 | – | 674 |
மொத்தம் | 2576 | 783 | 3359 |
TNUSRB PC Recruitment 2023 Qualification
இந்த இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு (SSLC) பாஸ் செய்திருந்தால் போதுமானது.
TNUSRB PC Notification 2023 Age Limit
01.07.2023 தேதி அன்று,
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 Years
அதிகபட்ச வயது வரம்பு:
- பொது பிரிவினர் – 26 years
- BC/MBC/DNC – 28 years
- SC/SCA/St – 31 years
- மூன்றாம் பாலினத்தவர் – 31 years
- ஆதரவற்ற விதவைகள் – 37 years
- முன்னாள் ராணுவத்தினர் முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் ஆகியோர் – 47 years
TNUSRB PC 2023 Exam Application Fees
- இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் அனைத்து பிரிவினர்களும் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
TNUSRB PC Job 2023 Salary Details
- இரண்டாம் நிலை காவலர் வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கான ஊதிய விகிதம் ரூ. 18,200 – 67,100. ஆகும்.
TNUSRB PC Recruitment 2023 Exam Pattern
- எழுத்துத்தேர்வு – 70 Marks ( 80 மதிப்பெண்கள் தமிழ் தகுதி தேர்வு)
- சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு – 24 Marks
- சிறப்பு மதிப்பெண்கள் – 6 Marks ( NCC/NSS)
How to Apply for TNUSRB Police Constable Exam 2023
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் https://www.tnusrb.tn.gov.in/ என்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்