Today School Leave District in Tamilnadu: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை, ஈரோடு, தேனி, கடலூர், திருப்பத்தூர், கரூர், திருப்பூர் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஓட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக தற்சமயம் இரு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை தொடர்ந்து தற்போது கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இணைத்து இருக்கக்கூடிய சூழலில், நள்ளிரவு முதல் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு இன்றைய தினம் இரு மாவட்டங்களுக்கு வெளியாகி இருக்கிறது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வரக்கூடிய காரணத்தால் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளி கல்லூரிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்க கூடிய பள்ளி கல்லூரிகளுக்கும் இன்றைய தினம் அதன் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை அறிவித்துள்ளனர்.